நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் நெப்போலியன்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 100க்கும் மேற்பட்ட வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில், இவருடைய மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் இருப்பதால் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி தன் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார்.
திருமணம்
இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் மூத்த மகன் தனுஷூக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் நிச்சயம் செய்து வைத்தார்.
இவர்கள் திருமணத்தை ஜப்பானில் தான் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்த நெப்போலியன். தற்போது திருமணம் தேதி நெருங்கிய நிலையில், தனது குடும்பத்துடன் டிராவல் செய்து வருகிறார்.
கனடாவுக்கு தன் குடும்பத்துடன் வந்த நெப்போலியன் பிறகு கப்பல் மூலம் ஜப்பானுக்கு போகப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.