Sunday, September 8, 2024
Homeசினிமாமகாநதி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை திவ்யா கணேஷ்.. மருத்துவமனையில் நடிகை, என்ன ஆனது

மகாநதி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை திவ்யா கணேஷ்.. மருத்துவமனையில் நடிகை, என்ன ஆனது


மகாநதி

பிரவீன் பென்னட் இயக்க விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் மகாநதி. 4 அக்கா-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் அழகான குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

தற்போது காவேரி-விஜய்-நிவின் இவர்களின் காதல் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்பது தான் இந்த சீரியல் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. 

நிவின் இன்றைய எபிசோடில், விஜய் தன்னிடம் கூறிய விஷயத்தை பற்றி காவேரியிடம் கூறுகிறார். இதனை கேட்டு ஷாக் ஆகும் காவேரி இந்த எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள் என நிவினிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார். 

மருத்துவமனையில் நடிகை

இந்த தொடர் ஆரம்பத்தில் கங்கா கதாபாத்திரத்தில் பிரதீபா என்பவர் நடித்து வந்தார்.

ஆனால் அவர் சில காரணங்களால் வெளியேற பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியாக நடித்துவரும் திவ்யா கணேஷ் மகாநதி தொடரில் கங்காவாக நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார்.

இப்போது தான் குமரன்-கங்கா காட்சிகள் கொஞ்சம் ரீச் ஆனது. அதற்குள் மகாநதி தொடரில் இருந்து திவ்யா கணேஷ் விலகுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். 

மகாநதி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை திவ்யா கணேஷ்.. மருத்துவமனையில் நடிகை, என்ன ஆனது | Divya Ganesh Quits Mahanadhi Serial

அதாவது அவர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இதனால் மகாநதி தொடரில் நடிக்க முடியாமல் போகிறது, எனது கதாபாத்திரத்திற்காக வேறொரு நடிகையை அவர்கள் தேட வேண்டும் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என பதிவு செய்துள்ளார். 

மகாநதி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை திவ்யா கணேஷ்.. மருத்துவமனையில் நடிகை, என்ன ஆனது | Divya Ganesh Quits Mahanadhi Serial



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments