மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதுமுக கலைஞர்களை வைத்து தொடங்கப்பட்ட ஒரு தொடர் மகாநதி.
பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அதிக கவனத்தை பெற்று வருகிறது.
தொடரின் டாப் ஜோடியாக பார்க்கப்படும் விஜய்-காவேரியை வைத்து நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
இந்த ஜோடிக்கும் விஜய் டெலி அவார்ஸில் விருதும் கிடைத்தது. இப்போது கதையில் விஜய்-காவேரி இருவரும் எப்போது தங்களது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்வார்கள் என்பதை காண தான் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
குழந்தை
இந்த நிலையில் மகாநதி சீரியலில் நடிக்கும் நடிகருக்கு நிஜத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த தொடரில் நிவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ருத்ரன் பிரவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.