மகாராஜா
தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து பின் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது 50 படங்கள் நடித்து சாதித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
கடந்த ஜுன் 14ம் தேதி விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது, திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார் என பாராட்டுகிறார்கள்.
நடிகரின் சம்பளம்
விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது மகாராஜா படத்திற்கும் அவர் அந்த சம்பளம் தான் பெற்று இருப்பார் என கூறுகின்றனர்.
ஆனால் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், இன்னும் நான் பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துகொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை.
தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை என்று கூறியிருந்தார்.