Saturday, December 7, 2024
Homeசினிமாமங்காத்தா படத்தில் அது இல்லை! ஆனால் GOATல் இருக்கும்.. கதையை கூறிய வெங்கட் பிரபு..

மங்காத்தா படத்தில் அது இல்லை! ஆனால் GOATல் இருக்கும்.. கதையை கூறிய வெங்கட் பிரபு..


GOAT

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் பிரபலமானவர். தற்போது இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 வெளிவர இருக்கும் திரைப்படம் GOAT.



இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் என தொடர்ந்து இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இந்த படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மங்காத்தா படத்தில் அது இல்லை! ஆனால் GOATல் இருக்கும்.. கதையை கூறிய வெங்கட் பிரபு.. | Venkat Prabhu Talks About Goat Movie

GOAT பற்றிய பேசிய வெங்கட் பிரபு



அதில், GOAT படம் எந்த வகையான படம் என்பதை டிரைலரில் கூறியதாகவும் ஆனால் அதை யாரும் சரியாக டிகோட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்படம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருப்பதாகவும், படத்தில் அடுத்து என்ன நடக்கபோகுது என்பதை எளிதில் கண்டு பிடிக்கமுடியாது என்றும் அந்த வகையில் படம் விறுவிறுப்பாக ரசிகர்களை எடுத்து செல்லும் எனவும் கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தில் அது இல்லை! ஆனால் GOATல் இருக்கும்.. கதையை கூறிய வெங்கட் பிரபு.. | Venkat Prabhu Talks About Goat Movie

மேலும், மங்காத்தா படம் போல் இப்படம் மிக வேகமாக செல்லும் எனவும், மங்காத்தா படத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் முழுக்க முழுக்க ஆண்களுக்கான படம் அதில் நண்பர்கள் எவ்வளவு மோசமாக ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி கொள்கிறார்கள் என்பதை காட்டும் ஒரு படமாக இருந்தது.

மங்காத்தா படத்தில் அது இல்லை! ஆனால் GOATல் இருக்கும்.. கதையை கூறிய வெங்கட் பிரபு.. | Venkat Prabhu Talks About Goat Movie

ஆனால் GOAT படம் அவ்வாறு இல்லாமல் ஒரு ஆண் மற்றும் அவர் குடும்பத்தை மையமாக வைத்து எடுத்த படமாக இருக்கும். காந்தி என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு பகுதியை காட்டும் ஒரு படம் என கூறினார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments