சமந்தா
நடிகை சமந்தா, தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் பிரபலம்.
பல்லாவரத்தில் பிறந்து மாடலிங் துறையில் முதலில் களமிறங்கி இப்போது இந்திய சினிமா கொண்டாடும் டாப் நாயகியாக வலம் வருகிறார். வேகமாக ஒடிக் கொண்டிருந்த அவரது திரைப்பயணம் உடல்நலக் குறைவால் அப்படியே பின் வாங்கியது.
தனது நோய்க்கான சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளும் டயட்டால் அவரது உடல் எடை மிகவும் மெலிந்துவிட்டது.
கடைசியாக இவரது நடிப்பில் சிட்டாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது, நல்ல வசூல் வேட்டையும் செய்தது.
போட்டோஸ்
சமீபத்தில் நடிகை சமந்தா ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அங்கு அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது அவர் ஆஸ்திரேலியா சென்றபோது எடுத்த போட்டோஸ், மசாஜ் வீடியோ என வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ போட்டோஸ்,