Sunday, December 8, 2024
Homeசினிமாமணிமேகலைக்கு பயம்.. பிரியங்கா செய்தது இதுதான்!

மணிமேகலைக்கு பயம்.. பிரியங்கா செய்தது இதுதான்!


மணிமேகலை குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கு காரணம் பிரியங்கா தன்னை வேலை செய்ய விடாமல் குறுக்கிட்டு கொண்டே இருக்கிறார் என கூறி இருந்தார்.

அவர் வெளியேறியது தைரியமான முடிவு என மணிமேகலைக்கு ஆதரவாக பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். அனிதா சம்பத் தொடங்கி தர்ஷா குப்தா, பிக் பாஸ் ஷிவின், ஐஸ்வர்யா தத்தா வரை பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி இருக்கின்றனர்.


பிரியங்காவுக்கு ஆதரவாக வந்த பாவனி

இந்நிலையில் பிக் பாஸ் ஷோவில் இருந்து பிரியங்காவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகை பாவனி ரெட்டி தற்போது இந்த சர்ச்சையில் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

“மணிமேகலைக்கு தான் insecurity, (தன் வேலை போய்விடுமோ என்ற பயம்), பிரியங்கா ஒன்றும் dominant ஆக இல்லை. உண்மை வெல்லும்” என பாவனி ரெட்டி பதிவிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் ஷோவில் சந்தித்துக்கொண்ட பாவனி மற்றும் அமீர் இருவரும் தற்போது காதலர்களாக வலம் வர பிரியங்கா தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments