குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி, சிரிக்க ரெடியா பங்காளி என சொன்னது போய் இப்போது பிரச்சனையை முதலில் சமாளி என்று தான் கூற வேண்டும் என தோன்றுகிறது.
மணிமேகலை பற்ற வைத்த ஒரு தீ இப்போது காட்டுத் தீ பரவி கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இதுபற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
மணிமேகலை 5வது சீசனில் தொகுப்பாளராக பணியாற்றும் போது தனது வேலையை செய்ய விடாமல் போட்டியாளராக இருந்த ஒரு தொகுப்பாளர் கெடுப்பதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதோடு அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணம் குறித்து ஒரு பெரிய வீடியோ போட இப்போது அதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
வனிதா பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், அனைவருக்குமே சுய மரியாதை ரொம்ப முக்கியம், நமக்கு எங்கு மரியாதை இருக்கிறதோ அங்கு நாம் இருக்கலாம், மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக்கூடாது.
மணிமேகலை தைரியமான பொண்ணு, யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டாங்க, புருஷனை கூட வாடா போடானு தான் பேசுவா, அவ அடாவடி கேரக்டர். பிரியங்கா பேசுவதிலும் பழகுவதிலும் நல்ல பொண்ணு, நம்ம திட்டினா கூட வாங்கிக்கிற ஒரு கேரக்டர் அவ.
மணிமேகலை புருஷனுடன் வாழ்கிறார், அவருக்கு சுயமரியாதை இருக்கு, பிரியங்கா கணவரை பிரிந்து வாழ்வதால் சுயமரியாதை என பேசுபவர்களை செருப்பால் இல்லை எதை வேண்டுமானாலும் வெச்சு அடிக்கலாம்.
மணிமேகலைக்கு நான் சொல்வது, மணி நீ வளர்ந்து வர பொண்ணு, உன்னுடைய லைஃப் நல்லா இருக்கிறது என்பதற்காக இன்னொருவர் லைப் டேமேஜ் செய்யப்படுவதை நீ ஊக்குவிக்காதே, சொம்பெல்லாம் தூக்கி எறிவதெல்லாம் பார்ப்பதற்கு நல்லா இல்லை.
பிரியங்கா என்னிடம் பேசினார், அவர் நாட்டிலேயே இல்லை. ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம், அவர் முன்கூட்டியே பிளான் செய்து வெளிநாடு சென்றிருக்கிறார்.
அவரிடம் பேசும்போது ரொம்ப அழுதாங்க, ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு பெண்ணுக்கு பெண்ணோட வலி தெரியவில்லை என்றால் அவர் பெண்ணே இருந்து பிரயோஜனமே கிடையாது என கூறியுள்ளார்.