Monday, April 21, 2025
Homeஇலங்கைமத வழிபாடுகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா.

மத வழிபாடுகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா.


மத வழிபாடுகளுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் இன்று சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில்  ஆரம்பித்தது.

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டுகள் இடம்பெற்றதுடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்றையும் கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கா நடத்தியிருந்தது.

இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொட்டகலை, நோர்வூட், அக்கரபத்தனை, நுவரெலியா, ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை, அம்பகமுவ, ஹங்குராகெத்த, நுவரெலியா பிரதேச சபை, நுவரெலியா மாநகர சபையில் சேவல் சின்னத்திலும், வலப்பனை பிரதேச சபையில் நாற்காலி சின்னத்திலும் இ.தொ.கா போட்டியிடுகின்றது.

மஸ்கெலியா மற்றும் கொத்மலை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான இ.தொ.காவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததுடன், அவை
தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments