Monday, February 17, 2025
Homeசினிமாமனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை

மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! – பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை


கடந்த வருடம் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். அதற்கு பிறகு தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். டிமான்டி காலனி 2 படத்தை தொடர்ந்து தற்போது புது படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் அர்ச்சனாவின் காதலர் அருண் பிரசாத் இந்த வருடம் நடைபெற்று வரும் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார்.

ஆரம்பம் முதலே அர்ச்சனா அருண் பிரசாத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார். அருண் பிரசாத் ஷோவில் தான் காதலில் இருப்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார். தனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்வது அவர் தான் என மறைமுகமாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல அர்ச்சனா கடந்த சீசன் ஜெய்த்தது எப்படி எனவும் அருண் பிரசாத் சில இடங்களில் கூறிய விஷயங்களால் நெட்டிசனகள் அவரையும் ட்ரோல் செய்ய தொடங்கி விட்டார்கள்.

நானும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன்..

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் சில விஷயங்களுக்காக நெட்டிசன்கள் அர்ச்சனாவை திட்டி வருகின்றனர். அதற்கு காட்டமாக அர்ச்சனா ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“நான் இப்போது வாழும் வாழ்க்கையை கட்டமைக்க இதயபூர்வமாக நான் செயல்பட்டு இருக்கிறேன். இந்த பாதையில் ஒவ்வொரு படியிலும் சவால்கள், விமர்சனங்கள், எண்ணற்ற தியாகங்கள் செய்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தற்போது என்னுடைய controlல் இல்லாத ஒரு விஷயத்திற்காக என் பெயரை சிலர் இழுக்கும்போது நான் மனமுடைந்து போகிறேன்.”

“நானும் அருண் பிரசாத்தும் தனித்தனி நபர்கள். இருவருக்கும் தனித்தனி பயணம் இருக்கிறது. ஒரு நண்பராக அவருக்கு ஆதரவு தருகிறேன், ஆனால் அவர் செயல்களுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.”

“நானும் வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்துவிட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது என் இதயத்தை உடைகிறது.”

“நீங்கள் எனக்கு காட்டிய அன்பு மற்றும் ஆதரவு மீது அதிகம் மரியாதையை கொண்டிருக்கிறேன். நான் பங்கெடுக்காத ஒரு விஷயத்திற்காக என்னை இப்படி செய்யாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.”

“பிக் பாஸில் ஒவ்வொருவரும் அவரவர் பயணத்தை தான் வாழ்கிறார்கள். நானும் மனுஷி தான், இது என்னை அதிகம் காயப்படுத்துகிறது” என அர்ச்சனா மிக உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments