அமலா பால்
மேக்கப் கலைஞர்களில் பிரபலமான ஒருவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் போட்டுள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை அமலா பால் படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் ஒருமுறை நடிகை அமலா பாலின் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயில் இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலோ, மரமோ இல்லாததால் கொஞ்ச நேரம் கூட எங்கேயும் அமர முடியவில்லை. அங்கிருந்த சில பெண்களும் தவித்தனர்.
மனிதாபிமானம் இல்லை
இதனால் அங்கே இருந்த கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆனால், நாங்கள் அமர்ந்து இருந்த கொஞ்ச நேரத்திலேயே நடிகை அமலா பால் தனது மானேஜரை அழைத்து எங்களை வெளியேறும்படி சொல்லினர்.
இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால், நாங்கள் இறங்கும் வரை அவர் எங்களை விடவில்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கிவிட்டோம்.
அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இதுபோல் பல சம்பவங்கள் எனக்கு நடந்தது. நான் பல ஸ்டார் நடிகைகளுக்கு மகேப்போ போட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள்.
நடிகை தபு எங்களை போன்ற கலைஞர்களுக்காக வேன் எல்லாம் கூட புக் செய்து நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால், அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமே இல்லாமல் எங்களிடம் நடந்துகொண்டார்.
படப்பிடிப்பில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான்.
கேமரா முன் நடிக்கும் நடிகர், நடிகைகளை அழாகாக காட்டுவது அவர்கள் தான். இருந்தாலும் பல நேரங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கொடுக்கப்படுவது இல்லை” என பேசியுள்ளார் மேக்கப் கலைஞர் ஹேமா.