பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 நேற்று பிரமாண்டமாக துவங்கியது. இந்த போட்டியில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
அர்னவ் – அன்ஷிதா
இதில் செல்லம்மா சீரியலில் ஜோடிகளாக இணைந்து நடித்து வந்த அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் சென்றுள்ளனர். ஆனால், இது இருவருக்கும் தெரியாது என்பது போல் நடந்துகொண்டனர்.
அர்னவ் பிரபல சீரியல் நடிகை திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
இதுகுறித்து திவ்யா அளித்த புகாரில் அர்னவ் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், நடிகை அன்ஷிதாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் குழந்தை பிறந்தபிறகு கூட அர்னவ் வந்து தன்னையும், குழந்தையையும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இதன்பின் அன்ஷிதா – அர்னவ் குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில், தான் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதன்பின் என்ன நடக்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.