சிறகடிக்க ஆசை
குடும்பங்கள் கொண்டாடும் கதைக்களமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இப்போது கதைக்களத்தில் அண்ணாமலை-விஜயா இருவரையும் பேச வைக்க வேண்டும் என் முத்து பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின் பாட்டி குடும்பத்துடன் பேசி இந்த பிரச்சனையை முடித்து வைக்கிறார்.
இன்றைய எபிசோடில் பிரச்சனை முடிவதோடு கணவன்-மனைவிக்குள் இருக்கும் அழகான விஷயத்தையும், கூட்டுக் குடும்பம் இப்படியும் சந்தோஷமாக இருக்கும் என்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
புதிய புரொமோ
பின் எபிசோட் முடிவில் நாளைய எபிசோடிற்கான புரொமோவும் வந்தது.
அதில் மனோஜிற்கு ஒரு கடிதம் கிடைக்கிறது, அதில் நான் யார் என யோசிக்காதீர்கள், தேடாதீர்கள், ஆனால் உங்களை சுற்றியுள்ளவர்களால் உங்களுக்கு பிரச்சனை வரப்போகிறது, ஜாக்கிரதை என அந்த கடிதத்தில் எழுதியுள்ளது.
இதைப்பார்த்து மனோஜ் பயந்தாலும் ரோஹினி இது உன்னை யாராவது ஏமாற்ற செய்திருப்பார்கள் என கூறுகிறார்.