சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஒரு சீரியல் குழுவினரிடம் இருந்து நல்ல கதைக்களத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் கதையாக உள்ளது. தமிழகத்தில் டிஆர்பியில் முதல் இடத்தில் எல்லாம் இடம் பிடித்தது.
ஆனால் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் குறைந்து காணப்படுகிறது.
இன்றைய எபிசோட்
தற்போது இன்றைய எபிசோட் கதைக்களத்தில் மீனா தனது மனதில் இருந்த மொத்த கோபத்தையும் மனோஜ் மற்றும் ரோஹினியை வெளுத்து வாங்கி தீர்த்துக்கொண்டார்.
மீனாவின் இந்த ருத்ர தாண்டவத்தை கண்டு விஜயா அப்படியே ஆடிப்போகிறார். ஆனால் கடைசியில் அது மீனாவின் கனவாகவே அமைந்துவிட்டது.
கனவாக இருந்தாலும் அந்த காட்சிகள் சூப்பர், நிஜமாகவே ஒருநாள் நடக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.