ராஷி கண்ணா
மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா.
அடுத்து தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்தவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
தமிழில் அவரது முதல் படம் இமைக்கா நொடிகள், அதன்பின் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுக்கு இணைந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.
காதல் தோல்வி
ராஷி கண்ணா தான் நடித்துள்ள தி சபர்மதி ரிப்போர்ட் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, ப்ரேக் அப் ஏற்பட்ட போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்.
அந்த கால கட்டம் என்து வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தது.
நண்பர்களும், அவர்கள் என் மீது வைத்திருந்த அன்பும் தான் நான் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவியது. இப்போது சினிமாவில் கவனம் செலுத்துகிறேன், அதையே காதலித்து வருகிறேன் என கூறியுள்ளார்.