Saturday, March 15, 2025
Homeசினிமாமருத்துவத்துறையை விட இது தான் முக்கிய காரணம்.. அனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி!

மருத்துவத்துறையை விட இது தான் முக்கிய காரணம்.. அனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி!


அனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவருடைய குடும்பமே சினிமாவில் இருக்கும்போது இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் மட்டும், நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதனை ஏற்று கொள்ளாமல், மருத்துவத்துறையை தேர்வு செய்து 15 வருடங்கள் எமர்ஜன்சியில் பணியாற்றி வந்தார்.

பின் அதில் இருந்து விலகி சென்னை வந்து செட்டில் ஆனார். தற்போது அனிதா விஜயகுமார் இதன் காரணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

முக்கிய காரணம்

அதில், “நான் மருத்துவராக விருப்பப்பட்டேன். எனக்கான தேவைகள் எல்லாவற்றையும் எனது அப்பா, அம்மா செய்து தந்தார்கள். 15 வருடங்கள் எமர்ஜென்சில் வேலை பார்த்தேன்.

பலரும் உயர் போகும் தருவாயில் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். எப்போதுமே பணத்தை விட, உறவுகள் தான் முக்கியம்.

மருத்துவத்துறையை விட இது தான் முக்கிய காரணம்.. அனிதா விஜயகுமார் நெகிழ்ச்சி! | Vijaykumar Daughter About Family

அதனால் என் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments