Sunday, September 8, 2024
Homeசினிமாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் தற்போதைய நிலை என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் தற்போதைய நிலை என்ன?


விஜயகாந்த்

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது ஒரு நடிகன் கேப்டன் விஜயகாந்த்.

சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து அதில் பயணித்தவர் அரசியல் வந்து மக்களுக்காக போராட வேண்டும் என்று நினைத்தார், அதேபோல் அரசியல் களத்திலும் இறங்கினார்.

தனது பயணத்தை தொடங்கிய வேகத்தில் எதிர்க்கட்சி என்ற அளவிற்கு உயர்ந்த அவரது தேமுதிக கட்சி முன்னேறிய வேகத்தில் சரிவையும் சந்தித்தது.

காரணம் உடல்நலக் குறைவால் விஜயகாந்த் அவர்கள் வீட்டிலேயே முடங்க அவரது கட்சியும் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தது.

உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிய விஜயகாந்த் அவர்கள் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மகனின் நிலைமை

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) தேமுதிக தலைவரும், நடிகருமான மறைந்த விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் சூழ கோலாகலமாக நடந்தது.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் அங்கேயே மயக்கம் அடைந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நலமுடன் வீடு திரும்பிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் தற்போதைய நிலை என்ன? | Vijayakanth Son Shanmuga Pandian Current Status

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments