மருத்துவமனையில் அனுமதி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 1ஆம் தேதி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை நன்றாக இருக்கிறாராம்.
டிஸ்ஜார்ஜ்
ரஜினிகாந்தின் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை மருத்வவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படவிருந்த நிலையில், இன்றைய நாள் சரியாக இல்லை என்பதன் காரணமாகவே நாளை டிஸ்ஜார்ஜ் ஆகிறாராம்.