நடிகர் முரளி
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் முரளி.
இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.
பூவிலங்கு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புது வசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.
சொந்த வாழ்க்கை
நடிகர் முரளி, காவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
இதில் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார், இன்னொரு மகன் ஆகாஷிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் மகள் சினேகா பிரிட்டோவுடன் திருமணம் நடந்தது.
முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறாராம்.