நடிகை ஸ்ரீதேவி
இந்திய சினிமா பெருமைப்படும் அளவிற்கு அழகு, நடிப்பு, பேச்சு, நடனம் என எல்லா விஷயங்கள் மூலமும் சினிமாவில் கலக்கி மக்களால் மறக்கவே முடியாத ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருந்த இவர் இப்போது இல்லை ஆனால் அவரது மகள்கள் சினிமாவில் கலக்க தொடங்கிவிட்டார்கள். போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என 2 மகள்கள் உள்ளனர்.
இதில் ஜான்வி அவரது அம்மா இருந்தபோதே நடிக்க தொடங்கிவிட்டார், அண்மையில் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் உடன் நடித்த தேவாரா திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
வைரல் போட்டோ
இந்த நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.
அதாவது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்தான் ஸ்ரீதேவி வசித்து வந்துள்ளார். ஸ்ரீதேவியின் பெயர் பலகைத் திறப்பு விழாவில் அவரது கணவர் போனி கபூர், மகள் குஷி கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.