Tuesday, October 15, 2024
Homeசினிமாமலேசியா மாமா விஷயத்தில் முக்கிய நபரிடம் சிக்கிய ரோஹினி

மலேசியா மாமா விஷயத்தில் முக்கிய நபரிடம் சிக்கிய ரோஹினி


சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தும் வகையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. நாயகன்-நாயகி பிரச்சனையில் சிக்கும் விஷயம் என்றால் உடனே வீட்டில் தெரிந்துவிடுகிறது, பல சண்டைகள் உருவாகிறது.

ஆனால் ரசிகர்களால் வில்லியாக பார்க்கப்படும் ரோஹினி செய்யும் அத்தனை தில்லு முல்லு விஷயங்களும் இன்னும் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே இருக்கிறது, அதுதான் ஏன் என ரசிகர்கள் பல கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

இப்போது கூட மலேசியா மாமா மீனாவிடம் சிக்குவார் என்று பார்த்தால் வழக்கம் போல் நடக்கவில்லை. ஆனால் ரோஹினி செய்யும் பித்தலாட்ட வேலைகளை மலேசியா மாமாவே கண்டுபிடித்துவிடுகிறார். 

அண்ணாமலை வீட்டு நபரிடம் யாரிடமாவது ரோஹினி சிக்குவார் என பார்த்தால் மலேசியா மாமாவிடம் தான் சிக்குகிறார்.

இன்றைய எபிசோடில் மலேசியா மாமா நீங்கள் செய்யும் வேலை எனக்கு எப்போதோ தெரியும், ஆனால் உனக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என கூற சப்பென இன்றைய எபிசோட் முடிகிறது.

நாளைய புரொமோ

நாளைய எபிசோடுக்கான புரொமோவில் மீனா முத்துவிடம் ரோஹினி மாமாவுடன் வீடியோ காலில் பேசினேன், துபாயில் இருப்பவர் எப்படி இங்கே இருப்பார் என கூற அட போ மீனா இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப விஷயங்களில் இதெல்லாம் சாதாரணம்.

இந்த பார்லர் அம்மா ஏதோ தில்லாலங்கடி வேலை செய்கிறது என அதிகம் சந்தேகப்படுகிறார் முத்து.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments