கீர்த்தி சுரேஷ்
தமிழில் கடந்த 2015ம் ஆண்டு இது என்ன மாயம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார், இவர்களது ஜோடியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் திருப்பு முனையாக அமைந்த படம் மகாநதி. இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது.
புடவையின் விலை
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா படம் தயாராகியுள்ளது. விரைவில் வெளியாகப்போகும் ரகு தாத்தா படத்தின் புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து வருகிறது.
அண்மையில் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் ஃப்ளோரல் புடவை அணிந்து வந்தார்.
நேர்த்தியான கைவினைத்திறனுக்காக அறியப்பட்ட புகழ்பெற்ற பிராண்டான, Torani நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புடவையை கீர்த்தி அணிந்திருந்தார்.
சிம்பிளான மேக்கப்பில் கருப்பு நிறத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்துவந்த புடவையின் விலை ரூ. 61 ஆயிரம் என கூறப்படுகிறது.