Tuesday, March 18, 2025
Homeஇலங்கைமழையுடனான காலநிலை தொடர்பான தற்போதைய நிலைமை – Oruvan.com

மழையுடனான காலநிலை தொடர்பான தற்போதைய நிலைமை – Oruvan.com


தற்போது நிலவுகின்ற மழை கொண்ட காலநிலை இன்று முதல் (12.03.2025) பெரும்பாலும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

எனினும், சில பதிவுகளில் உருவாகியுள்ள காற்று சுழற்சியானது தாழமுக்கமாக வலுவடையும் என்றும், இது மட்டக்களப்பை ஊடறுத்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மழை கொண்ட காலநிலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடரும் என்றும், குளங்கள், நீர்நிலைகள் நிரம்பும் என்றும், கனத்த மழை அல்லது மிக கனத்த மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டது போல் காலநிலை இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலும் இன்று முதல் நிலைமை சீரடையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதிக்குப் பின்னர் இம்மாத இறுதி வரை இடையிடையே சிறிதளவான மழையும், மேகமூட்டமான கால நிலையும்,
இடையிடையே வெயில் கொண்ட காலநிலையும் போன்ற நிகழ்வுகள் மாறி மாறி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் பெரியளவான கனத்த மழைக்கு சாத்தியம் இல்லை. எதிர்வரும் 18ஆம் திகதிக்குப் பின்னர் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளது.

ஆனால் அது ஒரு வீரியமான காற்று சுழற்ச்சியாக இருக்காது என்பதனால் மழையின் அளவும் குறைவாகவே இருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளுார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments