இயக்குனர் விஜய் மில்டன் தமிழில் பல குறிப்பிடத்தக்க படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக களமிறங்கியவர்.
அவர் இயக்கத்தில் இன்று மழை பிடிக்காத மனிதன் என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
மோசம் பண்ணிட்டாங்க.. விஜய் மில்டன் புகார்
இந்நிலையில் படத்தை பார்த்த விஜய் மில்டன் ஒரு அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார். தனக்கு தெரியாமலேயே ஒரு நிமிட காட்சியை படத்தின் தொடக்கத்தில் இணைத்து இருக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஹீரோ யார், அவர் உடன் வரும் சரத்குமார் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கும்வகையில் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆனால் அந்த ரகசியத்தை போட்டு உடைக்கும் வகையில் படத்தின் தொடக்கத்தில் அந்த வீடியோவை இணைத்து இருக்கின்றனர். அப்படி செய்துவிட்டால் படம் பார்ப்பவர்களுக்கு எப்படி சுவாரஸ்யமாக இருக்கும் என கடும் கோபத்துடன் விஜய் மில்டன் பேசி இருக்கிறார்.
இயக்குனர் விஜய்மில்டனுக்கு இப்படி ஒரு அநீதியா?
@vijaymilton @vijayantony pic.twitter.com/IitVbE2FeY— Valaipechu J Bismi (@jbismi_offl) August 2, 2024