Monday, February 17, 2025
Homeசினிமாமாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல்

மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல்


 விஜய் 

தமிழக அரசியல் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த களமிறங்கி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை கூறியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு மாநாட்டையும் நடத்தி முடித்தார்.

தற்போது வரை அவரது கட்சி சார்பில் நடந்த முதல் மாநாடு பற்றிய பேச்சு தான் இப்போது தமிழகத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 6 – ஆம் தேதி தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

விஜய் – திருமாவளவன்

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்
இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல் | Actor Vijay Going To Atten A Event

அம்பேத்கர் நினைவு நாள் அன்று நடைபெறும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments