Monday, February 17, 2025
Homeசினிமாமாபெரும் வெற்றியடைந்த படத்தின் ரீமேக்கில் விக்ரம்? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

மாபெரும் வெற்றியடைந்த படத்தின் ரீமேக்கில் விக்ரம்? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்


சீயான் விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளிவந்து வெற்றியடைந்தது. சில விமர்சனங்கள் படத்தின் மீது வைத்தாலும் கூட, படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வீர தீர சூரன் 2. இப்படத்தை அருண் குமார் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதன்பின் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதை நாம் அறிவோம். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. இந்த நிலையில், விக்ரம் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரீமேக் படத்தில் விக்ரம்

அண்மையில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் மார்கோ. மலையாளத்தில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம் விக்ரம்.

மாபெரும் வெற்றியடைந்த படத்தின் ரீமேக்கில் விக்ரம்? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் | Vikram Going To Do Remake Of Marco Movie

அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments