Sunday, November 3, 2024
Homeசினிமாமாமன்னன் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. காதலருடன் வெளியிட்ட சூப்பர் புகைப்படம்

மாமன்னன் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. காதலருடன் வெளியிட்ட சூப்பர் புகைப்படம்


ரவீனா ரவி

காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கண்ணா மற்றும் தீபிகா படுகோன் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி பிரபலமானவர் நடிகை ரவீனா ரவி.

டப்பிங் செய்வது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான மாமன்னன் என்ற படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாமன்னன் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. காதலருடன் வெளியிட்ட சூப்பர் புகைப்படம் | Dubbing Artist Raveena Instagram Post

தற்போது, இவர் வாலாட்டி படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு அவர் தான் என்னுடைய காதலர் என ரவீனா அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

ரவீனா தமிழில் மாமன்னன் படத்தில் மட்டுமில்லாமல் ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே மற்றும் வட்டார வழக்கு போன்ற படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அதிரடி புகைப்படம்

தற்போது ரவீனா அவர் காதலருடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments