அடுத்த பட அப்டேட்
இயக்குனர் மடோன் அஸ்வின் மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தாலும் கூட நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் படமே சிறந்த படைப்பை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இப்படத்தை வித்தியாசமான கதைக்களத்தில் அமைத்திருந்தார் இயக்குனர் மடோன் அஸ்வின்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், சரிதா, மிஸ்கின், சுனில், யோகி பாபு, மோனிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அசரீரி குரலாக விஜய் சேதுபதி பேசியிருந்தார்.
அடுத்த பட அப்டேட்
இந்த நிலையில், மாவீரன் எனும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்துள்ள இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மடோன் அஸ்வின் அடுத்ததாக பாலிவுட் திரையுலகில் களமிறங்கவுள்ளார்.
கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாகும் படத்தை தான் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இப்படம் குறித்து விரல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.