Tuesday, April 22, 2025
Homeசினிமாமாஸாக நடக்கப்போகும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு

மாஸாக நடக்கப்போகும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு


நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வந்தவர் நடிகர் விஜய்.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்று வந்தது. அடுத்து விஜய் தனது 69வது படமான கடைசி படத்தை எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்பட அறிவிப்பு வெளியானது, ஆனால் படப்பிடிப்புகள் பற்றி நிறைய விவரங்கள் வெளியாகவில்லை.


கட்சி மாநாடு

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது முதல் கட்சி மாநாட்டின் வேலைகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்.

வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் காட்சி மாநாடு நடைபெற உள்ளது. முதல் மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளாராம்.

அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் மாநாடு தொடங்கும் நிலையில் 6 மணிக்கு விஜய் உரையாற்ற உள்ளாராம். மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிய பின் விஜய் மேடைக்கு வருவார்.

முழுக்க முழுக்க தன் கட்சியின் கொள்கையைப் பிரகடனப்படுத்தும் வகையில் அவரின் பேச்சு அமைய இருக்கிறதாம். 

மாஸாக நடக்கப்போகும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு.... என்னென்ன விஷயங்கள் உள்ளது, முழு விவரம் | Details About Actor Vijay First Political Meet

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments