நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இருக்கிறார். இந்த வருடத்தில் தொடக்கத்தில் தான் அவருக்கு காதலர் ஜக்கி பக்னானி உடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் அவர் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் ராகுல் ப்ரீத் தான் ஒரு மிகப்பெரிய படத்தை தவறவிட்டுவிட்டதாக கூறி புலம்பி இருக்கிறார்.
தோனி பயோபிக் படம்
கிரிக்கெட் வீரர் தோனி பயோபிக் படத்தில் விபத்தில் இறந்துபோகும் அவரது காதலி ரோலில் திஷா பாட்னி நடித்து இருப்பார். அந்த ரோலில் முதலில் ராகுல் ப்ரீத் தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால் ஷூட்டிங் தேதி மாற்றப்பட்டதால் அவரால் அதில் நடிக்க முடியாமல் போனதாம். ஏற்கனவே தெலுங்கில் ஒரு படத்திற்காக தேதி ஒதுக்கிவிட்டு இருந்தாராம்.
இந்திய அளவில் பேசப்பட்ட அந்த படத்தை மிஸ் செய்தது பற்ற தற்போது ஒரு பேட்டியில் ராகுல் ப்ரீத் புலம்பி இருக்கிறார்.