ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இந்நிலையில், ஷாருக்கான் குளோபல் வில்லேஜில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தென்னிந்திய நட்சத்திரங்கள் சிலருடன் தனக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
கோரிக்கை
அதில், ” எனக்கு தென்னிந்தியாவில் அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு, விஜய், ரஜினி சார், கமல் சார் என பல நண்பர்கள் உள்ளனர்.
அவர்கள் அனைவரிடமும் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. அது என்னவென்றால் அவர்கள் அனைவரும் வேகமாக நடனமாடுவதை நிறுத்த வேண்டும். அவர்களுடன் இணைந்து நடனமாடுவது மிகவும் கடினமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.