சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் ஆனந்தி என்ற பெண்ணை மையமாக வைத்து சிங்கப்பெண்ணே என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகியான ஆனந்தி தனது குடும்ப சூழ்நிலைக்காக சென்னை வந்து கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறார்.
தைரியமான பெண் என்றாலும் சில சூழ்ச்சிகளில் சிக்கி தவித்திருக்கிறார். அண்மையில் அழகன் என்ற கடிதம் மூலம் வந்த காதலனால் படாத பாடு பட்டுவிட்டார் ஆனந்தி.
கடந்த சில வாரங்களாகவே ஒரே அழுகாட்சி கதைக்களமாக உள்ளது, விரைவில் டிராக் மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்றைய புரொமோ
இன்று எபிசோட் புரொமோவில் கருணாகரன்-மித்ரா வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் கார்மெண்ஸில் சில கண்டிஷன் போடுகிறார். இதைக்கேட்ட மித்ரா குழு கடும் ஷாக் ஆகிறார்கள்.
அப்படி மகேஷ் என்ன கண்டிஷன் போடுகிறார், இவர்களில் ஒருவராவது செய்த தவறுக்கு சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்து காண்போம்.