நடிகர் ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து பிரபலமானவர் நடிகர் ஷாருக்கான்.
ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 170 முதல் ரூ. 250 கோடி வரை சம்பளம் பெரும் ஷாருகான் மும்பையில் ரூ. 200 கோடி மதிப்பிலான ஒரு சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
Mannath என்று அழைக்கப்படும் இந்த பங்களாவின் இன்டிரியர் டிசைனிங் அனைத்தையும் ஷாருக்கான் மனைவியான கௌரிக் கான் தான் செய்துள்ளாராம். இவ்வளவு ஆடம்பரமான இந்த வீட்டில் அப்படி என்னென்ன வசதி இருக்கிறது என்று கீழே பார்க்கலாம்.
ஷாருக்கானின் ஆடம்பர பங்களா
தன் கணவர் ஷாருக்கான் பெரும் அனைத்து விருதுகளையும் வைப்பதற்கு பிரத்யேகமாக ஒரு அறை உள்ளதாம்.
ஷாருகான் மனைவி கௌரி கான் தன்னுடைய காலணிகள் அனைத்தையும் அடுக்கி வைப்பதற்காக ஒரு அழகிய அறை அமைக்கப்பட்டுள்ளதாம்.
தன் கணவர் ஷாருக்கானுக்கு மற்ற மொழி படங்களை பார்க்க பிடிக்கும் என்பதால் வெல்வெட் சுவர்களால் மிகவும் ஆடம்பரமாக ஒரு மினி தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இந்த வீட்டின் படிக்கட்டுகள் மரத்தால் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.