Thursday, January 2, 2025
Homeசினிமாமீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி பிரகாஷ் கூட்டணி..

மீண்டும் இணைந்த செல்வராகவன் – ஜி.வி பிரகாஷ் கூட்டணி..


இயக்குனர் செல்வராகவன்

காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.

அதன் பிறகு, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

செல்வராகவன் – ஜி.வி பிரகாஷ் கூட்டணி

இவர் திரைப்படங்களில் பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார். இருப்பினும், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன போன்ற படங்களில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருப்பர்.

இந்த படங்களில்
ஜி. வி இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி பிரகாஷ் கூட்டணி.. வைரலாகும் புகைப்படம் | Selvaraghavan Gv Prakash Again Paired In New Movie

செல்வராகவன் இயக்கும் புது படத்திற்கு ஜி. வி இசையமைக்கிறார் என இருவரும் கம்போசிங் அறையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ஒரு புது படத்தின் தொடக்கம் என குறிப்பிட்டுள்ளனர்.


தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments