Friday, April 18, 2025
Homeசினிமாமீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட் இதோ

மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட் இதோ


லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம், லியோ, என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து கொண்டார்.

தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் லோகேஷ், கமல்ஹாசனை வைத்து அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்டேட் இதோ 

அதில், “கமல் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். மீண்டும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட் இதோ | Lokesh Going To Direct Kamalhaasan

அது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments