அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த நிலையில், குட் பேட் அக்லி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து அஜித்தின் கெட்டப் குறித்து சில புகைப்படங்களை ஆதிக் வெளியிட்டு இருந்தார்.
வெற்றி கூட்டணி
அஜித் – சிறுத்தை சிவா இருவரும் இதுவரை 4 முறை இணைந்து பணியாற்றியுள்ளனர். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களில் இருவரும் இணைந்த நிலையில், இந்த வெற்றி கூட்டணியின் அடுத்த படம் எப்போது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைவது குறித்து உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில், அஜித்துடன் 5வது முறையாக இணைவீர்களா, இந்த வெற்றி கூட்டணி நடக்குமா என தொகுப்பாளர் கேள்வி கேட்க, கண்டிப்பாக நடக்கும் என சிறுத்தை சிவா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து சார் தான் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.