நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிப்பதை தாண்டி பல்வேறு விஷயங்களை பொழுதுபோக்கிற்காக செய்து வருகிறார். கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், பைக்கில் லாங் டிரைவ் என பல விஷயங்களை அவர் செய்கிறார்.
படங்களில் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அஜித் இவற்றை செய்து வருகிறார். அஜித் சமீபத்தில் பல கோடி ருபாய் கொடுத்து இரண்டு சொகுசு கார்களை வாங்கி இருந்தார். அதன் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது.
மீண்டும் ரேஸில் அஜித்
இந்நிலையில் அஜித் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க இருக்கிறாராம்.
2025 ஐரோப்பியன் GT4 சேம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.
அஜித் மீண்டும் ரேஸிங்கில் கம்பேக் கொடுப்பதை பற்றி பிரபல ரேஸிங் வீரர் நரேன் கார்த்திகேயன் இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.