Saturday, March 15, 2025
Homeசினிமாமீண்டும் சமந்தாவா? இணையும் மற்றொரு முன்னணி நடிகை.. வெளியான அப்டேட்

மீண்டும் சமந்தாவா? இணையும் மற்றொரு முன்னணி நடிகை.. வெளியான அப்டேட்


புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகம் Pushpa 2: The Rule மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

சுமார் 500 கோடிக்கும் மேல் செலவிட்டு இந்த படத்தினை எடுத்து வருகிறார்கள் என கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மற்ற மொழிகளிலும் ஹிட் அடித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர்
6 – ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் வரும் “ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி டான்ஸ் பெரிய ஹிட் அடித்து படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது.

முன்னணி நடிகை

இந்நிலையில், Pushpa 2: The Rule படத்தில் யார் நடனமாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அதற்கு விடையாக தற்போது, இந்த படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு மாஸாக நடனமாட தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவை இயக்குனர் உறுதி செய்து விட்டார் என கூறப்படுகிறது.

புஷ்பா 2 : மீண்டும் சமந்தாவா? இணையும் மற்றொரு முன்னணி நடிகை.. வெளியான அதிரடி அப்டேட் | Samantha Is Going To Dance Pushpa 2

மேலும், நடிகை ஸ்ரீலீலா, அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments