Saturday, December 7, 2024
Homeசினிமாமீண்டும் விஜய் டிவி பக்கம் வருகிறாரா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு

மீண்டும் விஜய் டிவி பக்கம் வருகிறாரா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு


நடிகர் ஆர்யன்

பாக்கியலட்சுமி தொடர் நிறைய புதுமுகங்களுடன் தொடங்கப்பட்டது.

சில பழகிய முகங்கள் இருந்தாலும் நிறைய புதுமுகங்களும் இருந்தனர், ஏன் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பாக்கியா என்கிற சுசித்ராவும் புதுமுகம் தான்.

அப்படி பாக்கியா-கோபியின் மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஆர்யன்.

இந்த சீரியல் மூலம் பிரபலமாகி வந்தவர் திடீரென தொடரில் இருந்து விலகினார். காரணம் ஜீ தமிழில் அவருக்கு மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகனாக நடிக்கும் வாய்புப கிடைத்தது, தற்போது நடித்தும் வருகிறார்.


புதிய போஸ்ட்


இந்த நிலையில் ஆர்யன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புதிய பதிவு போட்டுள்ளார். அதில் அவர், பெரிய அறிவிப்பு விரைவில் என பதிவிட்டுள்ளார்.

அதில் அவரது காஸ்டியூமை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மீண்டும் விஜய் டிவி பக்கம் வருகிறீர்களா, இந்த முறை Mr & Mrs சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள இருக்கிறீர்களா என பல கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

அதோடு ஷபானாவும் தான் சன் டிவியில் நடித்து வந்த மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகி வேறு எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் உள்ளார்.

எனவே இவர்கள் இருவரும் ஜோடியாக Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

மீண்டும் விஜய் டிவி பக்கம் வருகிறாரா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு | Serial Actor Aryan New Instagram Story Goes Viral



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments