சிறகடிக்க ஆசை
வயதானவர்களை மதிக்காமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் ஒரு சோகமான விஷயம் இந்த காலத்தில் அதிகம் நடக்கிறது.
அப்படிபட்ட இந்த காலத்தில் 80 வயதாகும் தனது அம்மாவை பாசமாக பார்த்துக்கொள்ளும் அண்ணாமலை காட்சிகள் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்களால் வரவேற்கப்படும் ஒரு முக்கியமான சீன்கள் என்றே கூறலாம்.
தற்போது பாட்டிக்கு 80வது பிறந்தநாள் கொண்டாட்டம் டிராக் சிறகடிக்க ஆசை சீரியலில் வரப்போகிறது.
நாளைய புரொமோ
தங்க நகைகள் கவரிங் நகைகளாக எப்படி வந்தது என முத்து செம கோபத்தில் உள்ளார், ஆனால் மீனா பிறந்தநாள் முடியும் வரை எதுவும் கேட்க வேண்டாம் என அமைதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நாளைய புரொமோவில் பாட்டி மீனாவிடம் அந்த நகைகள் எங்கே உடனே எடுத்து போடு என கூற விஜயா-மனோஜ் முழிக்கிறார்கள்.
மீனா ஏதாவது சொல்வாரா அல்லது கவரிங் நகைகளையே போட்டுக் கொள்வாரா என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.