மாட்டிக்கொள்வாரா ரோகிணி
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான ஒன்று சிறகடிக்க ஆசை. மக்கள் மனதை அதிகம் கவர்ந்த சீரியலாக சிறகடிக்க ஆசை மாறியுள்ளது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ரோகிணி தனக்கு ஏற்கனவே திருமணமாகி, தனக்கு ஒரு மகன் இருப்பதை மறைத்துவிட்டு மனோஜை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மாட்டிக்கொள்வாரா ரோகிணி
தனக்கு க்ரிஷ் எனும் ஒரு மகன் இருப்பதை மறைத்துவிட்டு, இந்த உண்மை மனோஜ் குடும்பத்திற்கு தெரியக்கூடாது என சமாளித்து வருகிறார். ரோகிணியின் அம்மா தான் தற்போது க்ரிஷை பார்த்து கொள்கிறார்.
இந்த நிலையில், ரோகிணியின் அம்மாவுடன் முத்துவும், மீனாவும் நெருக்கமாக உறவினர்கள் போல் பழகி வருகிறார்கள். முத்து மற்றும் மீனா இருவரிடமும் ரோகிணி மாட்டிக்கொள்வது போல் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..