சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் தொடர்.
இந்த தொடர் விஜய் டெலி அவார்ட்ஸில் நிறைய விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த நாயகன், நாயகி, தொடர் என பல விருதுகளை சீரியல் பெற்றது. இந்த வார புரொமோவில் விஜயா-மீனா சண்டை வந்துள்ளது.
அதாவது விஜயாவிற்கு கொண்டு சென்ற சாப்பாட்டை வழியில் ஒரு வயதான பாட்டிக்கு மீனா கொடுத்துவிட்டார்.
புரொமோ
இந்த நிலையில் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயா தனக்கு உணவு கொடுக்காமல் மீனா யாருக்கோ கொடுத்த விஷயத்தை அறிந்த கடும் கோபமடைகிறார்.
ஆனால் முத்து, மீனாவை விட்டுக்கொடுக்காமல் அவள் செய்த விஷயம் எனக்கு பெருமையாக உள்ளது என கூறுகிறார். இதோ சீரியல் புரொமோ,