சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் ஹிட் சீரியலான இதில் இப்போது கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சத்யா, விஜயாவின் பணத்தை திருடினார் என்பதை அறிந்ததும் மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் ஷாக் ஆகின்றனர். முத்துவிடம் மீனா வீட்டிற்கு வரக்கூடாது என விஜயா கூற அவரோ என் மனைவி கண்டிப்பா வருவா என்று கூறியிருந்தார்.
இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த மீனாவை விஜயா வரக்கூடாது என கூற முத்து சண்டை போடுகிறார்.
புரொமோ
இதனால் அண்ணாமலை வீட்டில் விஜயா மற்றும் முத்து இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
பின் நாளைய எபிசோட் புரொமோ வெளியானது, அதில் அண்ணாமலை, சத்யாவை தண்டிக்க உனக்கு உரிமை உண்டு ஆனால் மீனாவை வெளியே போக சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என கூறுகிறார்.
30 வருடம் உங்களுடன் வாழ்க்கை நடத்திய என்னை விட இப்போது வந்தவள் உங்களுக்கு முக்கியமா நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.