தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை கனிகா.
தொடர்ந்து தமிழில் இவர் படங்கள் நடித்து வந்தாலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் தான் இவருக்கு பெரிய ரீக் கொடுத்தது. மலையாள படங்களிலும் நடித்து வந்த கனிகா, திடீரென சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுத்து ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிக்காட்டி வந்தார்.
ஷாக்கிங் போட்டோ
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் கனிகா திடீரென தனது முகத்தில் தீ காயங்கள் ஏற்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
பின் அவருக்கு என்ன ஆனது என அவரது பதிவை பார்த்தால், விஜய்யின் கோட் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படத்திற்கான ஒரு காட்சிக்காக தான் இப்படி தீ காயம் ஏற்பட்டது போல் மேக்கப் போட்டிருக்கிறார்.
என்ன ஆனது என பதறிய ரசிகர்கள் படத்திற்காக தானா, சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.