Wednesday, September 18, 2024
Homeசினிமாமுகத்தில் ஒரே கவலை, சோகம், அவரை பார்க்கவே கஷ்டமாக உள்ளது- பானுப்பிரியா குறித்து பிரபல நடிகை

முகத்தில் ஒரே கவலை, சோகம், அவரை பார்க்கவே கஷ்டமாக உள்ளது- பானுப்பிரியா குறித்து பிரபல நடிகை


பானுப்பிரியா

தமிழில் 1983ம் ஆண்டு இயக்குனர் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்ல பேசுங்கள் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியா.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், ஒரு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

தொடர்ந்து நடித்து வந்தவர் 1998ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷலை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள்.

கணவரை பிரிந்து வாழும் நிலையில் நடிகை பானுப்பிரியாவிற்கு திடீரென ஞாபக மறதி அதிக உள்ளதாகவும், எதுவுமே நினைவில் இல்லாத நிலையை அடைந்துவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


நடிகையின் பேட்டி

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலங்கள் பற்றி தெரியாத சில விஷயங்களை நடிகை குட்டி பத்மினி கூறி வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் அவர், பானுப்பிரியாவை நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் பார்த்தேன்.

அப்போது பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். அவரது முகத்தில் ஒரு கவலை, சோகம் என வெறுமையாக இருந்தார்.

பானுப்பிரியாவை பார்க்க எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது, குழந்தைக்காக தான் வாழ்கிறேன் என்று சொன்னதை கேட்டு நான் உடைந்து போனேன் என்று அவர் வருத்தமாக பேசியுள்ளார். 

முகத்தில் ஒரே கவலை, சோகம், அவரை பார்க்கவே கஷ்டமாக உள்ளது- பானுப்பிரியா குறித்து பிரபல நடிகை | Kutty Padmini About Bhanupriya Personal Life

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments