கல்கி 2898 ஏடி
நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஷோபனா, தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உருவாகிய படம் கல்கி 2898 ஏடி.
இப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் தொடர்ச்சியாக அதில் உள்ள சில கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக கல்கி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின். படமும் நேற்று ஜுன் 27, படு மாஸாக வெளியாகிவிட்டது.
பாக்ஸ் ஆபிஸ்
ப்ரீ புக்கிங்கிலேயே பல கோடி வசூலித்த இப்படம் முதல் நாளில் முக்கிய இடத்தில் ஆல்டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்துள்ளது. அதாவது USAவில் முதல் நாள் ஆல்டைம் ரெக்கார்ட் சாதனை செய்துள்ளதாம்.
முதல் நாளில் நார்த் அமெரிக்காவில் ரூ. 46 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.