வேட்டையன்
கடந்த 10ஆம் தேதி வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது ரஜினிகாந்தின் வேட்டையன்.
TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வேட்டையன் படம் இதுவரை உலகளவில் ரூ. 158 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கோட் படத்தை முறியடித்த வேட்டையன்
இந்த நிலையில், கேரளாவில் மட்டுமே ரூ. 10.8 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் தெரிகின்றனர். இதனால் இன்று கேரளாவில் வேட்டையன் படம் Break even ஆகிவிடும். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவந்த கோட் கேரளாவில் ரூ. 12 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.
மேலும் கேரளாவில் கோட் நஷ்டமடைந்தது. ஆனால், தற்போது ரஜினியின் வேட்டையன் கோட் வசூலை முறியடித்து, லாபத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.