விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமா நிறைய புரட்சிகரமான படங்களை கொடுத்தவர்.
படங்கள் எப்படி நாட்டுப்பற்று, மற்றவர்களுக்கு உதவுவது, தவறுகளை தைரியமாக கேட்பவர் என எப்படி நடித்தாரோ நிஜத்திலும் அப்படியே வாழ்ந்தார்.
ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விஜயகாந்த் சென்னை வந்தபோது அவரின் உயிர் நண்பர் இப்ராஹிம் உடன் வந்தார்.
கதையாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, விஜயகாந்திற்கு பட வாய்ப்புகள் வந்தது. விஜயகாந்த் படங்கள் நடிக்க தொடங்கிய பின் அவர் நடிக்கும் படங்களின் கதையை ராவுத்தரே தேர்ந்தெடுத்தார்.
அவருக்கு கதை பிடிக்கவில்லை என்றால் அவ்வளவுதான், விஜயகாந்த் கால்ஷீட் வேண்டும் என்றால் ராவுத்தரிடம் தான் செல்ல வேண்டும். அப்படி விஜயகாந்த் திரைப்பயணத்தில் நடந்த விஷயம் குறித்து தயாரிப்பாளர் பேட்டி கொடுத்துள்ளார்.
3 மடங்கு சம்பளம்
அண்மையில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தாணு பேசுகையில், விஜயகாந்தை வைத்து படமெடுக்க வேண்டும் என முடிவெடுத்து ராவுத்தரை போய் பார்த்து பேசினேன்.
அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடி விடுவேன் என நினைத்து விஜயகாந்த் வாங்குவதை விட 3 மடங்கு அதிக சம்பளம் கேட்டார், நான் உடனே சம்மதம் சொன்னேன். எப்போது அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என கேட்க அவர் ஆடிப்போய்விட்டார்.
முதலில் கூலிக்காரன் படத்தை ரஜினியை வைத்து தான் எடுக்க ஆசைப்பட்டேன், அவர் தான் விஜயகாந்தை வைத்து எடுக்க சொன்னார் என கூறியிருந்தார்.