Sunday, September 8, 2024
Homeசினிமாமுதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, மோகன்லாலுடன் நடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... யார் தெரியுமா?

முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, மோகன்லாலுடன் நடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை… யார் தெரியுமா?


சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் இப்போது ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான். கதையில் கீழே விழுந்த விஜயா மற்றும் மனோஜின் கலகலப்பான காட்சிகள் அடுத்து வரப்போகிறது. 

ஆனால் ரசிகர்கள் ரோஹினி இன்னும் சிக்காமல் தொடர்ந்து தப்பித்துக்கொண்டே இருக்கிறார் என்ற கோபம் உள்ளது. அவரைப்பற்றிய உண்மை எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த வாரம் எந்த ஒரு சுவாரஸ்யமான கதைக்களமும் இடம்பெறவில்லை என தெரிகிறது.

நடிகையின் பேட்டி

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்கியலட்சுமி.

இவர் சமீபத்தில் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், நான் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தேன், அந்த திரைப்படங்களில் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாது.

முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, மோகன்லாலுடன் நடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Siragadikka Serial Actress Acts With Rajinikanth

தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் படத்தில் கார்த்திக் ஜோடியாகவும், சீதாவிற்கு தோழியாகவும் நடித்திருந்தேன். ஆனந்த் பாபு, ரஜினி, மலையாள நடிகர் மோகன்லால் படம் என நடித்திருக்கிறேன்.

எனக்கு ரஜினி பிடிக்குமா, மோகன்லால் பிடிக்குமா என்றால் நான் ரஜினி தான் சொல்வேன். எனக்கு ரஜினியோடு நடிப்பது மிகவும் பிடிக்கும், அவர் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான் என்று பேசியிருக்கிறார். 

முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினி, மோகன்லாலுடன் நடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Siragadikka Serial Actress Acts With Rajinikanth

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments