Tuesday, February 18, 2025
Homeசினிமாமுதலில் அதை செய்ய தயங்கினேன், பின் அப்பா கூறியதால் தான் செய்தேன்.. ஓபனாக கூறிய சினேகா

முதலில் அதை செய்ய தயங்கினேன், பின் அப்பா கூறியதால் தான் செய்தேன்.. ஓபனாக கூறிய சினேகா


சினேகா

புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது, ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். திருமணம், குழந்தைகள் வளர்ப்பு என சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக சினேகா விஜய்யுடன் கோட் படத்தில் நடித்திருந்தார்.


நடிகையின் தயக்கம்


ஒரு பேட்டியில் நடிகை சினேகா கதையை கேட்டதும் முதலில் இதில் நடிப்பதா என தயங்கிய படம் குறித்து கூறியுள்ளார். அதில் அவர், புதுப்பேட்டை கதையை நான் கேட்டபோது எனது தந்தையும் உடன் இருந்தார்.

முதலில் அதை செய்ய தயங்கினேன், பின் அப்பா கூறியதால் தான் செய்தேன்.. ஓபனாக கூறிய சினேகா | Sneha Talks About Why She Acted In Pudhupettai

கதையை கேட்டுவிட்டு வந்ததும் இதில் நடிக்கலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. உடனே என் அப்பா சில ஹிந்தி நடிகர்களின் பெயரை சொல்லி அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் சொன்ன விதம் பார்க்கையில் உன் கதாபாத்திரத்தை அவர் தவறாக காண்பிக்கமாட்டார் என தோன்றுவதாக கூறினார்.

என் அப்பாவே அப்படி சொன்னதும் மிகப்பெரிய விஷயமாக தோன்றியது, ஏனென்றால் அப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அதன்பின்பே நான் அந்தப் படத்தில் நடித்தேன் என கூறியுள்ளார்.

முதலில் அதை செய்ய தயங்கினேன், பின் அப்பா கூறியதால் தான் செய்தேன்.. ஓபனாக கூறிய சினேகா | Sneha Talks About Why She Acted In Pudhupettai



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments